Saturday, 9 August 2014

சைவத் திருமுறைகள்

| No comment



திருச்சிற்றம்பலம்

வேத நெறி தழைத்தோங்க! மிகு சைவத் துறை விளங்க!!

சைவத் திருமுறைகள் என்பவை பல்லவர் காலத்திலும் அதன் பின்னரும் தோன்றிய சைவ சமய நூல்களின் தொகுப்பாகும். இவை திருமுறைகள் என்றும் அறியப்படுகின்றன. இவை மொத்தம் 12 திருமுறைகளாக வகுக்கப்பட்டுள்ளன. 


10 ஆம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனின் ஆட்சியின்போது, சிதம்பரம் கோயிலிலே கவனிப்பாரற்றுக் கிடந்த திருமுறைகள் பூச்சிகளால் அரிக்கப்பட்டு அழிந்தவை போக எஞ்சியவற்றை, நம்பியாண்டார் நம்பி என்பவர் திருமுறைகளாகத் தொகுத்தார்.


திருமுறைகள் பழந்தமிழ் இசையையொட்டிய பண்களுடன் பாடப்பட்டு வருகின்றன. சைவக் கோயில்களிலும், சைவர்கள் வீடுகளிலும், பாடசாலை முதலிய இடங்களில், சமய நிகழ்ச்சிகளின் போதும் திருமுறைகள் இன்றளவும் பாடப்பட்டு வருகின்றன. இவை பன்னிரு திருமுறைகள் எனும் அழைக்கப்பட்டன.


திருமுறைகளில் பாடல்களின் எண்ணிக்கை.

திருமுறை                                    பாடியவர்(கள்)                           பாடல் எண்ணிக்கை
முதலாம் திருமுறை         திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்              1,469
இரண்டாம் திருமுறை திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்              1,331
மூன்றாம் திருமுறை திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்              1,358
நான்காம் திருமுறை திருநாவுக்கரசு நாயனார்                              1,070
ஐந்தாம் திருமுறை         திருநாவுக்கரசு நாயனார்                              1,015
ஆறாம் திருமுறை         திருநாவுக்கரசு நாயனார்                                 981
ஏழாம் திருமுறை         சுந்தரமூர்த்தி நாயனார்                                      1,026
எட்டாம் திருமுறை         மாணிக்கவாசகர்                                              1,058
ஒன்பதாம் திருமுறை 9 ஆசிரியர்கள்                                                         301
பத்தாம் திருமுறை         திருமூலர்                                                              3,000
பதினொன்றாம் திருமுறை 12 ஆசிரியர்கள்                                              1,385
பன்னிரண்டாம் திருமுறை சேக்கிழார்                                                       4,286
                                                                                                                                     ---------

                                                                                             மொத்தம்             18,280
                                                                                                                                    ======


63 நாயன்மார்கள் 


1.அதிபத்த நாயனார்
2.அப்பூதியடிகள் நாயனார்
3.அமர்நீதி நாயனார்
4.அரிவாட்டாய நாயனார் 
5.ஆனாய நாயனார்
 6.இசைஞானி நாயனார்
 7.இடங்கழி நாயனார்
8.இயற்பகை நாயனார் 
9.இளையான்குடிமாற நாயனார்
10.உருத்திரபசுபதி நாயனார்
11.எறிபத்த நாயனார்
12.ஏயர்கோன்கலிக்காம நாயனார்
13.ஏனாதிநாத நாயனார்
14.ஐயடிகள் நாயனார்
15.கணநாத நாயனார் 
16.கணம்புல்ல நாயனார் 
17.கண்ணப்ப நாயனார்
18.கலிக்கம்ப நாயனார்
19.கலிய நாயனார் 
20.கழற்றறிவார் நாயனார் 
21.கழற்சிங்க நாயனார்
 22.காரி நாயனார் 
23.காரைக்காலம்மை நாயனார் 
24.குங்குலிக்கலை நாயனார்
25.குலச்சிறை நாயனார்
26.கூற்றுவ நாயனார் 
27.கோச்செங்கட்சோழ நாயனார்
28.கோட்புலி நாயனார்
29.சடைய நாயனார்
30.சண்டேசுவர நாயனார் 
31.சத்திய நாயனார்
32.சாக்கிய நாயனார்
33.சிறப்புலி நாயனார்
34.சிறுத் தொண்ட நாயனார்
36.செருத்துணை நாயனார்
37.சோமாசிமாற நாயனார்
38.தண்டியடிகள் நாயனார்
39.திருக்குறிப்புத் தொண்ட நாயனார்
40.திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் 
41.திருநாவுக்கரசு நாயனார்
42.திருநாளைப்போவார் நாயனார்
43.திருநீலகண்ட நாயனார்
44.திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் 
45.திருநீலநக்க நாயனார் 
46.திருமூல நாயனார் 
47.நமிநந்தியடிகள் நாயனார் 
48.நரசிங்கமுனையரைய நாயனார் 
49.நின்றசீர்நெடுமாற நாயனார் 
50.நேச நாயனார் 
51.புகழ்ச்சோழ நாயனார் 
52.புகழ்த்துணை நாயனார் 
53.பூசலார் நாயனார் 
54.பெருமிழலைக்குறும்பநாயனார் 
55.மங்கையர்க்கரசி நாயனார் 
56.மானக்கஞ்சாற நாயனார் 
57.முருக நாயனார் 
58.முனையடுவார் நாயனார் 
59.மூர்க்க நாயனார் 
60.மூர்த்தி நாயனார் 
61.மெய்ப்பொருள் நாயனார் 
62.வாயிலார் நாயனார் 
63.விறன்மிண்ட நாயனார்




Tags : , , ,

No comments:

Post a Comment